(21/11/2020) பூரணாங்குப்பம் சமுதாய சேவா மையத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

அனைவருக்கும் வணக்கம் 🙏 சனிக்கிழமை(21/11/2020) மாலை 6:30 மணியளவில் சமுதாய சேவா மையத்தில் இந்திய அரசு நேரு யுவகேந்திரா & பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் & பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம், இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா போட்டி பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு மன்ற கௌரவ தலைவர் திரு.த.திருவேங்கடம் அவர்கள் தலைமை தாங்கினார், மன்றத்தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்றார், சிறப்பு விருந்தினர்களாக NYK ஒருங்கிணைப்பாளர் திரு.D.தெய்வசிகாமணி, பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உதவி இயக்குனர் திரு.S.சேதுராமன், சமூக ஆர்வலர்கள் திரு.R.வாழ்முனி, திரு.S.செல்வகுமார், மேல்நிலை எழுத்தர் திரு.S.சண்முகப்பிரியன், இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், மருத்துவர்கள் திரு.M.பார்த்திபன், திரு.A.ஜீவேந்திரன் இவர்கள் இளைஞர்களிடையே எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட சில கேள்விகளை எழுப்பினர் அதற்கு சரியான பதில் அளித்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, இவ்விழாவின் போது ...