கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக (20/12/2020) டி.என்.பாளையம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்கள் 50 குடும்பங்களுக்கு,🥚முட்டையுடன் வெஜிடபிள் பிரியாணி🥘, 5 கிலோ 🌾அரிசியுடன் கூடிய துணிப்பை,போர்வை வழங்கப்பட்டது
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏
பசி தீர்க்கும் வானொலி
கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக இன்று (20/12/2020) டி.என்.பாளையம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்கள் 50 குடும்பங்களுக்கு,🥚முட்டையுடன் வெஜிடபிள் பிரியாணி🥘, 5 கிலோ 🌾அரிசியுடன் கூடிய துணிப்பை,போர்வை வழங்கப்பட்டது,
இதற்கு மன்ற கௌரவ தலைவர் திரு.த.திருவேங்கடம் மற்றும் மன்றத்தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் இவர்கள் தலைமை தாங்கினர், இவருடன்
கலாம் பசுமை பாதுகாப்பு இயக்கத்தலைவர் திரு.தாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்
சமூக ஆர்வலர் திரு.கணேஷ் மற்றும் திரு.A.சிலம்பரசன் இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 🌾அரிசி,🛍️துணிப்பை,போர்வை வழங்கினார்கள்.இவருடன் மன்றத்துணைத்தலைவர் திரு.க.கண்ணபிரான், மன்ற பொருளாளர் திரு.M.ஏகலைவன், சமூக ஆர்வலர் திரு.R.ரஞ்சித்குமார் இவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மன்றப்பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முடிவில் மன்றச்செயலாலர் திரு.H.வேல்குமரன் அவர்கள் நன்றியுரை கூறி முடித்தார்.
என்றும் மக்கள் சேவையில்,
கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,பூரணாங்குப்பம்.
Comments
Post a Comment