இருசக்கர வாகனத்தில் சென்று மரக்கன்று நடும் திட்டம்
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏
பசுமை தாயகம் காடு வளர்ப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இருசக்கர வாகனத்தில் சென்று மரக்கன்று நடும் திட்டம் இத்திட்டத்தை பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் (16/12/2020) காலை 6 மணியளவில் மன்ற கௌரவ தலைவர் திரு.த.திருவேங்கடம் மற்றும் தொழிலதிபர் திரு.புகழேந்தி இவர்களால் தொடங்கப்பட்டது, இருசக்கர வாகனத்தில் பூரணாங்குப்பதில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்கே வசிக்கும் மக்களிடையே மரக்கன்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மன்றத்தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் அவர்களின் தலைமையில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டன, இப்பயணத்தை மன்ற செயலாளர் திரு.H.வேல்குமரன் மற்றும் சமூக ஆர்வலர் திரு.R.ரஞ்சித்குமார் இவர்கள் வழிநடத்தினர், இதில் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
என்றும் மக்கள் சேவையில்,
கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,பூரணாங்குப்பம்.
Comments
Post a Comment